வெற்றி என்பது வெற்றியல்ல !

"வெற்றி" மனிதனுக்கு மிகவும் பிடித்த விஷயம்.  வெற்றி பெறும்போது அவனுக்குள் ஓர் கர்வம் பிறக்கிறது.  வெற்றி அவனை சந்தோஷப்படுத்துகிறது.  இந்த சமுதாயத்தில் தான் ஏதோ சாதித்துவிட்டதாக தன்னை தலை நிமிர செய்கிறது.  தன்னால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கையை தருகிறது.  அவன் ஒவ்வொரு முறை வெற்றி பெறும்போதும்..

தன் உடல், அறிவு, ஆற்றல், பலத்தை இந்த உலகுக்கு நிரூபிக்கிறான்.  தான் செய்தது இன்னதென்று தன் உடன் பிறந்தோர் முதல், பெற்றோர் மற்றும் பிறர் பெருமை பேசுவதை ரசிக்க துவங்குகிறான்.  அவனுக்குள் தன்மானம், கவுரவம் வெற்றியினால் புதுப்பிக்க படுவதாக உணர்கிறான்.

அந்த வெற்றி பல நேரங்களில், வெற்றி பெற்றவருக்கே ஒரு பேரதிர்ச்சியாக தான் முதலில் துவங்குகிறது !  பின்னர் படிப்படியாக அந்த வெற்றி தன் முழூ உழைப்பால் கிடைத்துவிட்டதாக பெருமை கொள்ள துவங்குகிறான்.  ஆனால் உண்மையான வெற்றி எனபது வெற்றி பெற விரும்புபவர் நிச்சயமாக இருக்க வேண்டும்.  "தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று !" அப்படி மனவுறுதி இல்லாதபோது கிடைக்கும் வெற்றி ஒரு வெற்றியே கிடையாது.

இன்றைய தலைமுறையினர் தன்னம்பிக்கை இல்லாத, உருதியில்லதவர்களாக வளர்க்கபடுகிறார்கள்.. அவர்களும் சுய அறிவு இல்லாமல் வளர்கிறார்கள்.

தேர்வு எழுதிவிட்டு  வரும் மாணவனை  அழைத்து  எப்படி தேர்வு எழுதியிருக்கிறார், எவ்வுளவு மதிப்பெண்  வரும் என்றால் "எழுதியிருக்கிறேன் ... மதிப்பெண் வரும்போது தெரியும்'' என்று தன் மீது நம்பிக்கை இல்லாத, ஒரு மனவெறுப்பில் இந்த காலத்து பிள்ளைகள் வளர்க்கிறார்கள்!

முன்போல் இப்போது கிடையாது நீங்கள்  எழுதிய பதிலுக்கு எற்ற மதிப்பெண் கிடைக்காத பட்சத்தில் அதற்க்கான மதிப்பெண்னை உங்களால்  பெறமுடியும் மறுகூட்டல் (Re-Evaluation) மற்றும் நீங்கள்  எழுதிய விடைத்தாளை நகலாக பெற்று அதன் மூலம் உங்கள் பதிலுக்கேற்ற மதிப்பெண் கிடைத்ததா என்று சரி பார்க்கும் வரை இன்றைய நடைமுறை மாறியிருக்கிறது ... இன்னும் பழைய சித்தாந்தங்களை, மனவுறுதி இல்லாதவர் போல் பேசுவதை மாற்றிக் கொள்ள வேண்டும் !

வெற்றி என்பதை போதை போல் அவர்களுக்கு திணிப்பவர்கள்  பெரிதளவு  பெற்றோர்களே!! 100 க்கு 100 எடுத்தால் என் பிள்ளை என்று பெருமை பேசுவார்கள் ! ஒரு மதிப்பெண் குறைந்தாலும் ஒரு விவாத பொருளாக எடுத்தக் கொண்டு  தங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பேசி  அந்த பிள்ளைகளை  மனவுளைச்சலுக்கு  ஆலகுவார்கள்!!

மதிப்பெண்  ஒருவரின் திறமை தீர்மானித்து விடாது ! மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள்  வாழ்க்கையின் உச்சத்திற்கு போன பல உதாரணங்கள் உண்டு. தோல்வி  என்பது  நம்முடைய ஒரு முயற்சிக்கு கிடைத்த பலன்.

வாழ்க்கை என்பது ''பல முயற்சிகள், பல தோல்விகள், பல அவமானங்கள், பல சகிப்புதன்மைகள், சில வெற்றிகள்!''

வெற்றியை மட்டும் உன் வாழ்க்கையில் சுவாசிக்க நினைத்தால்.. நீ மூச்சு திணறிக் கொண்டே தான் வாழவேண்டியதாக  இருக்கும்!  முயற்சிகள் பல செய்.. அனுபவங்கள் பல பெறு.. அதிலிருந்து வெற்றிகள் சில பெரும் போதுதான் இந்த போராட்டமான வாழ்க்கைக்கு நீ தகுதியானவனாக மாற முடியும்! கண்ணதாசன் கூறியது போல

''நீ விரும்புகின்ற ஒன்று நடக்காத வரையில..
நீ விரும்பாத ஒன்று நடக்கின்ற வரையில்"

 கடவுள் இந்த பூமியில்  இருந்து  கொண்டு தான் இருப்பான்..! ஏன் என்றால் நாம் விரும்பாத ஒன்று நிகழ்வதாலேயே கடவுளை எப்போதும் நாம் துணைக்கு அழைக்கிறோம்! அவர் எல்லோரது விருப்பத்தையும் நிரைவேற்ற  முடிவதில்லை! 

"கடமையை செய்.. பலனை எதிர்பார்க்காதே! ''

என்று பகவத்கீதை சொல்வதை போல செயலை செய்யும் உரிமையும் கடமையும் நமக்கு உண்டு ஆனால் அதன் பலன் பலரை சார்ந்திருக்கிறது! வாழ்க்கையின் உன்னதத்தை புரிந்து வெற்றிக்களிப்பை  போதை போல் கருதுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தோல்வி பெறுபவரை ஏளனமாக பேசுபவரும் தன் அருவருக்கத்தக்க குணத்தை மாற்றிகொள்ள  வேண்டும் ! தோல்வி பெற்றவரை வெற்றி பெறும்வகையில் தன்னம்பிக்கை வார்த்தைகள் பேசாததாலேயே தோல்வி என்பது தொல்வியடைந்தவர்களை காயப்படுத்த பார்க்கிறது!

தோல்வியடைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரது மனம்  புண்படாமல் வாழும் ஒரு வாழ்க்கையே சிறந்த வாழக்கை....!!
 

No comments:

Post a Comment