புத்தாண்டு துவக்கத்தில்
புயலொன்று கரைகடந்தது.. !
இந்த புயல் தானே வந்ததால் என்னவோ
இதன் பெயரும் கூட - தானே !
ஓங்கி வளர்ந்த மரங்களை எல்லாம்
ஓரங்கட்டி போட்டுவிட்டது ..!
விளைந்த நிலங்களை எல்லாம்
வெற்று நிலமாய் மாற்றிவிட்டது ..!
மின்கம்பங்களை எல்லாம்
காய்ந்த விறகாய் ஒடித்துவிட்டது..!
கூரை வீடுகளை எல்லாம்
கூளமாய் அலங்கோலப்படுத்தியது..!
இயற்கையின் விளையாட்டில்
இதுவும் ஒன்றா.. ?
மரங்களை அழித்து போதும் - என்
மனிதர்களை விட்டுவை ..!
அங்கே !
இன்னலில் வாடும் இதயங்களுக்கு
இது சமர்ப்பணம்!